மணவை முஸ்தபா பிறந்த நாள் : அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
திருச்சி, ஜூன் 19 திருச்சி மணப்பாறை அரசுக் கல்லூரியில் மணவை முஸ்தபா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மணவை முஸ்தபா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.