அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சி : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

0 335
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 19 திருச்சி மணப்பாறை அரசுக் கல்லூரியில் மணவை முஸ்தபா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். .
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மணவை முஸ்தபா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள், மண்டலத் தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் சுந்தர், கல்லூரி முதல்வர், பேராசிரியர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.