மாரிஸ் – அரிஸ்டோ ரயில்வே மேம்பால பணிகள் : துரை வைகோ எம்.பி. ஆய்வு

0 57
Stalin trichy visit

திருச்சி, மே 19  திருச்சி மாநகர் பகுதியில் மாரிஸ் மற்றும் அரிஸ்டோ மேம்பால பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ என்று பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அந்த வகையில் திருச்சி மேரிஸ் மேம்பாலம் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம், பஞ்சப்பூர் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு அந்த பணிகள் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பணிகள் முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும், பணிகளை விரைவாக முடிப்பதற்கு அதிகாரியுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

திருச்சி மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருந்த மாரிஸ் மேம்பாலம் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் விவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டு அறிந்துள்ளேன். பணிகள் எந்த நிலைமையில் உள்ளது என்பது குறித்து விரிவான தகவலை விரைவில் தெரிவிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.