அன்பில் அறக்கட்டளை – அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

0 198
Stalin trichy visit

திருச்சி, டிச.1  திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமினை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  இதில் அண்ணாநகர், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜர் நகர், காட்டூர், அம்பிகாப்புறம் தகேஸ்வரி நகர், மிலிட்டரிகாலனி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெற்றனர்.

முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் மாநகரக் செயலாளர் மு மதிவாணன். பகுதி  செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் K.K.K.கார்த்திக் மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், வட்டக்கழகச் செயலாளர்கள் ஆனந்த, சுரேஷ், விஸ்வநாதன், தவசீலன், தமிழ்மணி, மன்சூர், முருகானந்தம், கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.