திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் : அமைச்சர் வழங்கினார்
திருச்சி, டிச.1 திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா வழங்கும் விழா .
DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் – தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக மாவட்ட மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பாக பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .
இவ்விழாவிற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகோபால் மாநகர அமைப்பாளர் கலைவாணி ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார்.
ந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநில கலை இலக்கிய அணி புரவலர் N.செந்தில் பகுதிச் செயலாளர் ராஜ்முகம்மது மாவட்ட மாநகர சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் மகேஷ் குமார் குமார சரவணன் மோகன் குமார் சாமுவேல் ஆனந்த் குமார் செந்தில் முத்து முருகேசன் சேரன் செங்குட்டுவன் நாகராஜன் ஜெயக்குமார் சந்திரசேகரன் பிரபாகர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.