அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

0 147
Stalin trichy visit

திருச்சி, அக்.6 அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் திருவெறும்பூர் ஜெய் நகர் காமராஜர் திருமண மண்டபத்தில் கூத்தைப்பார் பேரூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூத்தைப் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு கூத்தைப்பார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ் மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.