முசிறி,தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது
திருச்சி, அக்.6 முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் திடீர் மழை காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது.
முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டரித்தது.
வெயிலின் தாக்கத்தால் பெரிய வர்கள் பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானில் கரு மேகங்கள் திரண்டது.லேசான குளிர் காற்றுடன் மிதமான மழை பெய்தது.சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த லேசான சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடி பட்டம் விதைத்த விவசாயிகளுக்கும், உழவு செய்வதற்கும் இந்த மழை உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து இயற்கை விவசாயி முசிறி யோகநாதன் என்பவர் கூறும் போது தற்போது பெய்து வரும் மழை படத்திற்கு ஏற்றது.மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே வருங்காலத்தில் இயற்கையை காக்க முடியும் எனவே வரத்து வாய்க்கால்களின் கரைகள் ,ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் பனை விதைகள் ஆகியவற்றை நட்டு வளர்ப்பது இயற்கைக்கு நாம் செய்யும் பெரும் உதவி. பனை விதைகளை நட்டு வைத்த பின்பு விதை நடப்பட்ட குழியை சுற்றி மருதாணி குச்சிகளை நட்டு வைத்தால் பனை விதை துளிர்க்கும் போது அதை ஆடுகள் கடிக்க வாய்ப்பு இல்லாமல் போகும். மருதாணி குச்சிகள் இலை துளிர்த்து உயிர் வேலி போல காக்கும் எனவே இந்த மழைக்காலத்தை இயற்கை ஆர்வலர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.