மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் பெரியார் சிலை ஆட்டோ சங்கக் கூட்டம்

0 94
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22  மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில் (AlCCTU) பெரியார் சிலை ஆட்டோ சங்க கூட்டம் நடைபெற்றது

 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில் (AlCCTU) பெரியார் சிலை ஆட்டோ சங்க கூட்டம் தலைவர் K.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிபிஐ(எம்.எல்) நகர செயலாளர் ப.பாலு கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசினார் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்
வருடம் வருடம் சங்கத்தின் சார்பாக வண்டி கருப்பன் கோவிலில் கெடாவெட்டும் நிகழ்சியை ஆகஸ்ட் 15ல் நடத்துவது, சங்கத்தின் உறுப்பினர் பதிவை அதிகபடுத்துவது, உறுப்பினர் சந்தா தொகையை இந்தமாத இறுத்திக்குள் முடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. நிகழ்வில் செயலாளர் C.அருள்ராஜ் பொருளாளர் T. இன்னாசி துணை தலைவர் M.ஏசுதாஸ்
துணை செயலாளர் N. மணிகண்டன் செயற்குழு உறுப்பினர்கள் R.கிருஸ்ணன், A.முருகானந்தம், M.ஷாஜஹான், R.ராமசந்திரன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.