நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குண்டு கட்டாக கைது

0 52
Stalin trichy visit

திருச்சி ஜூலை 22  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குண்டு கட்டாக கைது

நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இந் நிலையில் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சிக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே இன்று இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் இந்த திட்டமிட்டபடி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடனே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பிறகு போராட்டம் நடத்திய பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.