திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி ஆராய்ச்சித்துறை மற்றும் திருச்சி டால்பின் சிறப்பு பள்ளி ஆகியோருக்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பரஸ்பர ஒப்பந்தமானது ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவைப்படும் சிறப்பு தேவைகள் மற்றும் உயர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை கட்டமைப்பதற்க்காக திருச்சி தேசியக் கல்லூரியில் உடற்கல்வி ஆராய்ச்சித் துறை மற்றும் டால்பின் சிறப்பு பள்ளி ஆகிய இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
சிறப்பு குழந்தைகளை உள்ளடக்கிய மேம்பட்ட வசதிகளுடன் வழக்கமான பட்டப்படிப்பு திட்டங்களுக்கு உதவ, உடற்கல்வி மற்றும் உள்ளடக்கிய கல்வி ஆகிய துறைகளில் ஒரு இடைநிலைக் கண்ணால் ஆராய்ச்சி நடத்தவும், சமூகத்திற்கு சேவையை விரிவுபடுத்துவதற்காக இரு நிறுவனங்களின் ஆதரவுடன் குறுகிய கால படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த பரஸ்பர ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோபால்தாஸ் ஜுவல்லரியின் சி.இ.ஓ ஜில்திசா கலந்துகொண்டு இருவருக்குமிடையே ஒப்பந்தத்திற்கு முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்வில் தேசிய கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன், கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, மற்றும் டால்பின் சிறப்பு பள்ளியின் நிர்வாக இயக்குனர் பிரவீனா கார்மெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy