தற்”கோலை” தினம் – “துயரங்களில் துணை நிற்போம் தற்கொலையை தடுப்போம்” – இது உளவியல் மாணவர்கள் ஸ்பெஷல்!

0 480
Stalin trichy visit

“செத்தரெல்லாம் போல இருக்கு”, “என்ன பண்றதுன்னே தெரியல…”, “நாலாம் ஏன் உயிரோட இருக்கணும்” இந்த வார்த்தைகளை நாமோ, நம் அருகில் இருப்பவர்களோ, தெரிந்தவர்களோ என ஒவ்வொரு நாளும் இவற்றை கேட்காமல் அந்த நாளை கடந்துவிட முடியாது. ஒவ்வொரு மனிதரும் இங்கு இனம் புரியா ஒரு உயிரினம். அதற்குள் தோன்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பலர் கலங்கிப்போய் தங்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க தாங்களே தேடிக் கொள்ளும் விபரீதம் தான் இந்த தற்கொலை!

ஒரு ஆண்டிற்கு மட்டும் உலகம் முழுவதிலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டு தங்கள் வாழ்விற்கு முற்றுபுள்ளி வைக்கின்றனர். இதிலும் குறிப்பாக 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் என தங்களுடைய மரணத்திற்கு தற்கொலை இரண்டாவது பெரும் காரணமாக அமைகிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது உலக அளவில் உள்ள நாடுகளில் 8 பேர் தற்கொலை செய்துகொண்டால் அதில் ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்பவராக உள்ளார். அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும் பல்வேறு உளவியல் பிரச்சனைகளும் சமூக காரணங்களும் அடங்கியுள்ளது. குறிப்பாக மன அழுத்தத்தால் மட்டும் 90 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை என்பது 60 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம். நம்மிடையே தற்கொலை குறித்த சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் தற்கொலை எண்ணம் என்பது எல்லா மனநிலை கொண்டோருக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணம்தான் என்பதை உணரவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை எண்ணங்கள் எதற்காக தோன்றுகிறது, அதிலிருந்து விடுபட காரணங்கள் என்ன? என கேட்டு அறிய உளவியல் துறை படிக்கும் மாணவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

“வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஒரு மிகப்பெரிய தவறு”

யுகான்ஸ் பிரவீன் குமார் . ரி
உளவியல் மாணவர்

தற்கொலை என்பது ஒருவருடைய வாழ்வில் சில பல மாற்றங்களினாலும், தீராத ஏக்கங்கள், தீராத வலிகள், தீராத வேதனைகள் என ஒரு மனிதன் தனித்து விடும் போது தற்கொலை எண்ணங்கள் தூண்டுகிறது. இதற்கு 2 வகையான நினைவு திறன்கள் இந்த தற்கொலை எண்ணத்திற்கு நம்மளை தூண்டுகிறது என ஆராய்ச்சி சொல்கிறது. ஒன்று நம்முடைய நிகழ்கால வலிகள் வேதனைகள் என மன‌ அழுத்தம் ஆவது, அதேபோல கடந்த காலத்தை பற்றி நினைத்து மனத்தை மனவேதனை அடைந்து மறக்கமுடியாத தீயவற்றை நினைப்பதால் நம்மை தற்கொலை எண்ணத்தில் மனம் தள்ளிவிடுகிறது. இப்ப இருக்க காலகட்டங்களில் டிப்ரஷன் என்கிற ஒரு வேர்ட் ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டு வருது. அது ஒர்க் பண்ற இடமா இருக்கட்டும், மத்த இடங்களாக இருக்கட்டும், இந்த டிப்ரஷன் என்கிற மன உளைச்சலால் நிறைய பேரு இன்றைய காலகட்டங்களில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்போ இருக்கிற இந்த 20வது நூற்றாண்டுகளையும் ஒவ்வொரு வருடத்திற்கு 30 சதவீதம் பேர் தற்கொலை எண்ணத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவதற்கு தனிமையில் இருந்து நாம் தவிர்க்க வேண்டும். நான் தனிமையாக இருக்கிறோமோ அல்லது தனிமையான இடத்திற்கு தள்ளப்படும்போது நமக்கான நபர்களையோ அல்லது நமக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஒரு மிகப்பெரிய தவறு. நமக்குன்னு யாருமே இல்ல… அப்படிங்கற ஒரு மனநிலையை மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் உள்ளது அதனுடைய முயற்சிகளையும் முடிவுகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தற்கொலை மட்டுமே முடிவல்ல….”

“ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் கண்டிப்பாக தற்கொலை எண்ணமே வராது”

மணிகண்டன்
உளவியல் மாணவர்

“என்ன பொறுத்தவரை தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் ஒரு நபர் தன்னுடைய இன்ப துன்பங்களை சொல்வதற்கு ஆள் இல்லை என்றும், சின்ன பிராப்ளமா இருந்தா கூட அதை ஏற்றுக் கொள்வதற்கான மனநிலை இல்லாமல் இந்த தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனர். எல்லா பெற்றோர்களும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அது சின்ன குழந்தைகளாக இருக்கட்டும் பெரியவர்களாக இருக்கட்டும், பெற்றோர்களாக இருக்கட்டும் கல்யாணம் ஆனவர்களாக இருக்கட்டும் தயவுசெய்து பிரச்சனை இருக்கும் பட்சத்தில் “என்ன பிரச்சினையாக இருந்தாலும் பரவால்ல… நான் உனக்கு இருக்கேன்” என ஆறுதல் சொல்ல ஒருத்தர் இருந்தால்கூட கண்டிப்பாக தற்கொலை என்ற எண்ணமே ஒருவருக்கு வராது.

தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ஒரு நிமிடம் பாசிடிவ் விஷயங்கள் அனைத்தையும் நினைத்து பார்க்கவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்கள் 5 பேர் தான் இருப்பார்கள். ஆனால் பிடித்தவர்கள் 10 பேர் இருப்பார்கள். நம்முடைய வாழ்வின் சந்தோஷமான தருணங்களை நினைத்து பாருங்கள் தற்கொலை எண்ணமே நிச்சயம் வராது…” என்றார்.

“வாழ்க்கை என்பது ஊஞ்சல் மாதிரி மேலையும் போகும்… கீழேயும் போகும்”

ஜெயஸ்ரீ
உளவியல் மாணவி

“மனசு என்பது எப்போதும் ஒரு நிலையானதாக இருக்காது அது மாறிக் கொண்டேதான் இருக்கும். தற்கொலைக்கான எண்ணங்கள் தோன்றும் போது நமக்கு பிடித்தவர்களிடம் நம்முடைய பிரச்சனைகளை பற்றி நிச்சயமாக பேச வேண்டும். நாம் அப்படி சொல்லும் போது அவர்கள் சொல்லும் தீர்வு நமக்கு ஒத்துவரவில்லை என்றாலும் நாம் சொல்லும் போது அதற்கான தீர்வுகள் நமக்கே கிடைத்துவிடும்.

தற்கொலை எண்ணங்கள் தோன்றும் போது மற்றவர்களிடம் பேசும்போது அந்த உள் அர்த்தங்கள் நமக்கு புரிந்து விட்டாலே நம்முடைய மனதை ஈசியாக ஹேண்டில் செய்ய முடியும்.

நம்முடைய வாழ்க்கை என்பது ஊஞ்சல் மாதிரி தான் அது மேலேயும் போகும்…கீழேயும் போகும்…. இதனை புரிந்து கொண்டாலே நிச்சயமாக தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம்…” என்றார்.

இன்றைய தினத்தில் இருந்து நாம் ஒன்றை தொடங்குவோம். நாம் அருகில் இருப்பவர்களோ, பிடித்தவர்களோ என முடிந்தளவு அவர்களை அறிந்து கொள்ள முயற்சிப்போம். துயரங்களில் துணை நிற்போம்… தற்கொலையை தடுப்போம்….

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.