திருச்சி தேசிய கல்லூரி மற்றும் டேலண்ட் ஃபேக்டோரி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வழிகாட்டுதல், தொழில் துறை வெளிப்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு, பயிற்சி மற்றும் முன்னாள் மாணவர் மேலாண்மையை வழங்குவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன், டேலண்ட் ஃபேக்டோரி ராஜேஷ் மற்றும் தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo