மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, நவ.3 திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் ரகுபதி (வயது 30) இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும்
இவருக்கு கடந்த பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் ரகுபதி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு வீட்டில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ரகுபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ரகுபதி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்.இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.