முசிறி – அய்யம்பாளையம் இடையே மினி பேருந்து சேவை: முசிறி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

0 145
Stalin trichy visit

திருச்சி, நவ.17  முசிறி முதல் அய்யம்பாளையம் வரை புதிய வழித்தடத்தில் மினி பேருந்து இயக்கப்பட்டது – விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு. முசிறி அருகே அய்யம்பாளையத்தில் மினி பேருந்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அய்யம்பாளையத்தில் ARK மினி பேருந்து தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து மினி பேருந்தை இயக்கி வைத்தார்.

முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கி பயணம் சிறக்க வாழ்த்தினார். திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கார்த்திக் முயற்சியின் பெயரில் ஏ ஆர் கே மினி பேருந்து இயக்கப்பட்டுள்ளது இந்த பெயர் வந்து அய்யம்பாளையம் முதல் முசிறி வரை சேந்தமாங்குடி அந்தரப்பட்டி வீரமணி பட்டி வேலகாநத்தம் காமாட்சி பட்டி கருத்தாழம்பட்டி அரசு கலைக் கல்லூரி வழியாக பயணிக்கவுள்ளது.

கிராமப்புற பொதுமக்களின் போக்குவரத்திற்கு உதவியாக இந்த மினி பேருந்து இயக்கப்பட்டதற்கு பொதுமக்கள் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.