அமைச்சர் அன்பில்மகேஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்கமோதிரம்
திருச்சி, டிச.2 திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் துறையூர் அரசு மருத்துவமனைகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு சித்தூர் மணிவேல் சார்பாக தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திமுக நிர்வாகி தொட்டியம் சித்தூர் மணிவேல் முசிறி அரசு மருத்துவமனை மற்றும் துறையூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லம் உணவு விருந்துசித்தூர் மணிவேல் சார்பாக வழங்கப்பட்டது.