10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ செல்வங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

0 263
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ செல்வங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,

10’ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள என் அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

நீங்கள் பயின்ற ஒரு அறைதான், நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் மகிழ்ச்சியாக உரையாடிய ஒரு அறைதான் உங்களுக்கான தேர்வு அறை.
உங்களின் ஆசிரியர்கள்தான் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.
உங்களின் நண்பர்கள்தான் உங்களைச் சுற்றி அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். அது உங்களின் இடம். ஆகவே எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள். பயம் கொள்ளாதீர்கள்.

தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும்.

மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள். வாழ்த்துகள்.

என்று தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.