திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

0 746
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  திருவெறும்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார் மேலும் நிகழ்வில் அவருடன் மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மு‌.மதிவாணன் மற்றும் ஆய்வில் உடன் இருந்தார்

இந்த பேருந்து நிலையத்திற்கான இடமானது திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தின் அருகே 30 மீட்டர் அகலமும் 128 மீட்டர் நீளமும் கொண்ட சுமார் 94 சென்ட் இடமானது பார்வையிடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் சேகரன் கருணாநிதி, கங்காதரன், சிவா, ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.