தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
திருச்சி, ஜூலை 9 தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை சந்தித்து அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.
தகைசால் தமிழர் விருதாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை திருச்சியில் அவரது இல்லத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தும் “மணிச்சுடர்” 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை பேராசிரியர் காதர் மைதீன் அமைச்சரிடம் வழங்கினார் அதனை பெற்றுக்கொண்டு, அவர் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை” நூலினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்