வேங்கூர் குவளை வாய்க்கால் தூர்வாரும் பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

0 108
Stalin trichy visit

திருச்சி, அக்.27 வேங்கூர் குவளை வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.

முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கண்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனமானது, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமாக விளங்கி வருகிறது. உய்யக்கொண்டான் வடிகால் நீரானது திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி பூசத்துறை இடையே உள்ள குவளை வாய்க்காலில் கலந்து வெளியேற்றப்படுகிறது.  குவளை வாய்க்கால் அருகே வேங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பயிர் செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் குவளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றப்படாமலும் மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன.
தகவல் அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  குவளைவாய்க்காலை பார்வையிட்டதுடன், ஆகாயத்தாமரை உடனடியாக அகற்றி துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.  ஆய்வின்போது அரசு அதிகாரிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வேங்கூர் கிராம மக்கள் விவசாயிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.