அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100: தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வேண்டுகோள்
திருச்சி, ஜூன் 29 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் K. பிரேம் ஆனந்த் 27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில் மயக்கமடைந்து இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் இரவு 11:39 மணி அளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்புக்கு கொண்டு 2 நிமிடம் 34 நொடி காத்திருந்தும் எந்த பதிலும் வரவில்லை மேலும் மீண்டும் முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் கூறுகையில், அவசர போலீஸ் 100 எண்ணை தொடர்பு கொண்டால் சரிவர செயல்படவில்லை. இவ்வாறு இருந்தால் அவசரத்திற்கு பொதுமக்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள் ஆகையால் இதனை உடனே பொதுமக்கள் நலன் கருதி சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.