மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

0 132
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி தெற்கு உக்கடை பகுதியில் அமைந்துள்ள ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சுன்னத் ஜமாத் நிர்வாக கமிட்டி சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் “இப்தார் நோன்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான  அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மேலும், மண்டலம் 3 கோட்டத் தலைவர்
திரு. M. மதிவாணன், அரியமங்கலம் பகுதி செயலாளர் திரு. A.M.G. விஜயகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவினை ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் A. அப்துல் ரஜாக், செயலாளர் A. முகமது இப்ராஹிம், பொருளாளர் M. முகமது உசேன் மற்றும் துணைத் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைத்துள்ளனர்.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வு, அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் நோக்கில் ‘மத நல்லிணக்க விழாவாக’ கொண்டாடப்படுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.