வெகு விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

0 131
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  வெகு விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் பேட்டி

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வாரம் பாண்டிச்சேரி மாநிலம் மற்றும் தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக வருகிற 11 ஆம் தேதி திருச்சியில் பாரத ஜனதா அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

11ம் தேதி திருச்சியில் அரசு நல திட்ட விழாவும் அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்.

நிகழ்ச்சி மாலை 5:00மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

வருகிற 11 ஆம் தேதி பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தன்று அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 4000 கோடி அளவிலான திட்டங்களை அறிவித்தார்.

திருச்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

நிச்சயமாக தமிழக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தொகுதி பங்கீடு குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம். திமுக காங்கிரஸ் போல இழுபறி அல்ல.

ஜாதி கொடுமை சொல்வதைக் காட்டிலும் தமிழகத்தில் கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கஞ்சா போட்டுக் கொண்டு போ வேர் வருவார்களை எல்லாம் வெட்டுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை பொறுப்பு டிஜிபி கூட உங்களால் போட முடியவில்லை. பிறகு எப்படி ஆட்சி நல்ல முறையில் நடக்கும்.
எனவே மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.