அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கல்

0 847
Stalin trichy visit

திருச்சி, அக்.8  அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

2025 – 2026 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை 50 பேருக்கு மேல் உயர்த்திய தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 179 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் நேற்று 07.10.2025 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் வழங்கினார்.
இதில் புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற கல்வியாண்டில்
2024-2025 ல் 912 மாணவர்கள் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு 2025 – 2026 ல் 964
52 மாணவர்களை கூடுதலாக சேர்த்தமைக்கு தலைமை ஆசிரியர் முனைவர் சரவணவேலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இப்பாராட்டுச் சான்றிதழ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் & அலுவலக ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பாராட்டுச்சான்று ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.