அமைச்சர் அன்பில் மகேஸ் வரிசையில் நின்று வாக்களித்தார்
திருச்சி, ஏப். 23 செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி செந்தண்ணீர்புரம் டி.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் சுமார் 30 நிமிடம் தன் மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு இந்த தேர்தல் சந்திக்கிறேன். மக்கள் கண்டிப்பாக தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பார்கள். வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.