திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, ஜன.7 திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில்
புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
தற்போதுள்ள சூழலில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் மருத்துவப் பயனாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
புற்றுநோய் சிகிச்சைக்காக புற்றுநோய் மருத்துவ பயனாளிகள் மற்ற மாவட்டத்தை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு செல்வதை தடுக்கும் பொருட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் தணிப்பு சேவை, மற்றும் இரண்டு ஊடுகதிர் கருவிகள், நவீன சலவையகம் மற்றும்
சூரிய மின் உற்பத்தி கருவியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வர்
குமரவேல், மருத்துவர் அருண் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.