மணப்பாறையில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்

0 123
Stalin trichy visit

திருச்சி, நவ.10 மணப்பாறை அருகே திமுக முதன்மைச் செயலாளர் பிறந்தநாளை பிரியாணி வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் அருகே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் முன்னாள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜலெட்சுமி வெங்கடேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி விவி.வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் ஓந்தாம்பட்டி மணி, வழக்கறிஞர் துரைஅழகிரி, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகராஜ், சதீஸ், மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.