திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை: பொதுமக்கள் அச்சம்

0 188
Stalin trichy visit

திருச்சி, நவ.10  திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25). என்ற இளைஞர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது,

இந்நிலையில் பீமநகர் மார்சிங்பேட்டை பகுதியில் அந்த இளைஞர் நின்ற போது கொலை செய்ய விரட்டி உள்ளது அப்போது இளைஞர் உயிர் தப்பிக்க அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்து உள்ளார் அப்போது அவரை விரட்டி சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல்  தாமரைச்செல்வன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக  வெட்டி படுகொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியாது, இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ள நிலையில் திருச்சி மாநகரில் காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திஉள்ளது

Leave A Reply

Your email address will not be published.