வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனைகள்

0 192
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று  மாலை, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கர் 352 பேருக்கு, வாக்கு எண்ணிக்கையின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

கழக முதன்மைச் செயலாளர் – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 352 பேருக்கும் அடையாள அட்டைகளை கே.என்.நேரு வழங்கினார்.
இதில் வெற்றி வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு, மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், க.வைரமணி, மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் பெரம்பலூர் , கரூர், திருச்சி வடக்கு, திருச்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.