புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு

0 315
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை நிதியின் கீழ் ரூபாய் 17.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்…

இதனைத் தொடர்ந்து திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்…

முன்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மருத்துவத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி,
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.