முசிறி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து

0 292
Stalin trichy visit

திருச்சி, டிச.18 சென்னையில் கடந்த வாரம் பெய்த நிக் ஜம் புயல் மழையில் பாதித்த மக்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் மற்றும் தூய்மை பணிகள் செய்திட ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நகராட்சியில் இருந்தும் தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டனர். மண்டல இயக்குனர் ஆணையின்படி முசிறி நகராட்சியைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளர் சையதுபீர் தலைமையில் பணியாளர்கள் 10 பேர் சென்னைக்கு சென்று சிறப்பான முறையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இதற்காக முசிறி நகராட்சி பணியாளர்களை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

பணிகள் முடிந்து ஊர் திரும்பிய முசிறி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்தினார். அப்போது நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி , நகர மன்ற தலைவர் கலைச்செல்வி , துணை தலைவர் சுரேஷ் பொறியாளர் சம்பத், நகர செயலாளர் சிவக்குமார், உட்பட நகர மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள்உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.