அருண்நேருவை ஆதரித்து எம்.எல்.ஏ. அப்துல்சமது பரப்புரை
திருச்சி, மார்ச் 27 இந்தியா கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அருண் நேரு அவர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாக அப்துல்சமது முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டையில் திறந்த வெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 வருட ஆட்சியில் தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மாநில விரோத போக்கை கண்டித்தும், அனைவருக்கும் அனைத்தும் என திராவிட மாடல் அரசை சிறப்பாக நடத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அருண் நேரு அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.
மமக திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், M P நஜீர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட மாவட்ட துணை அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.