மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதியில் மணப்பாறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது முன்னனுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆரியம்பட்டியை சேர்ந்த வேல்முருகன்(26 என்பதும் மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் 10 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.