மாற்றுக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க.வில் இணைந்தனர்

0 292
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19  மணப்பாறை அருகே நடந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் கட்சியில் திரளாக இணைந்த பெண்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிகவின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.குமார் தலைமையில் கடை வீதியில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிதாசன் கலந்துகொண்டு கழக கொடிக்கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது மாற்றுக் கட்சியைச் சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  தலைமையை ஏற்று தேமுதிகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் தொப்பம்பட்டி சரவணன், மாவட்ட அவைத்தலைவர் அர்ஜூணன், மாவட்ட பொருளாளர் வசந்த்பெரியசாமி, செயற்குழு உறுப்பினர்கள் முல்லை சந்திரசேகர், செங்குறகச்சி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் பீட்டர், மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி, தொழிற்சங்க துணைச்செயலாளர் மோகன், மாவட்ட அணி நிர்வாகிகள் கார்த்திகேயன், சின்னதுரை, செல்வவிநாயகம், ஒன்றிய அவைத்தலைவர் சுவீட்பாலு, பொருளாளர் முத்தமிழ்ச் செல்வன், துணைச்செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, அன்பரசு, மணியன், ராதிகா, மாவட்ட பிரதிநிதிகள் முருகேஷ், பழனிச்சாமி, முருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ், மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகள் முருகானந்து, டோல் பெரியசாமி, தொமு, வேலுச்சாமி, பாலு, கிருஷ்ணமூர்த்தி, தேக்கமலை, லெட்சுமணன், பொன்னன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.