முசிறி அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு

0 62
Stalin trichy visit

திருச்சி, ஆக.21  முசிறி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தந்தை பெரியார் பாலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா மணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் இவரது மனைவி மணிமேகலை( 50) இவரது மகன் மகேஷ் ராஜ் (22) நேற்று மாலை சொந்த வேலையாக தனது தாயுடன் பைக்கில் திருச்சி சென்று விட்டு, மீண்டும் மணமேடு கிராமத்திற்கு குளித்தலை பெரியார் பாலம் வழியாக வந்துள்ளனர்.

அப்போது முசிறியில் இருந்து தனியார் கல்லூரி பேருந்து குளித்தலை நோக்கி சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக பைக் நிலைதடுமாறியதில் தாய் மணிமேகலையுடன் மகேஷ் ராஜ் பைக்  சாலையில் விழுந்துள்ளார். இதில் மணிமேகலையின் தலை மீது தனியார் கல்லூரி பேருந்து டயர் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிமேகலை பரிதாபமாக இறந்து போனார். மகன் கண்ணெதிரே தாய் இறந்து போனதை கண்டு மகன் கதறி அழுதது காண்போர் நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி,முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் கோபிநாத் (29 ) மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது

Leave A Reply

Your email address will not be published.