தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு.5 பேர் கைது

0 379
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள சோழன் மொழி நகரில் முன்விரோதம் மற்றும் வாகனத்தை வேகமாக ஓட்டியதை தட்டிகேட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி கணேசன் தவசியை தாக்கி விட்டு தப்பியோடினார். தப்பியோடிய கணேசன் வீட்டிற்கு சென்ற தவசி மற்றும் அவரது ஆதரவாளர்கள், கணேசன் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் கணேசனின் தம்பி விஜயகுமார் (24), இவரது தாய் வில்வகனி (55) ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள சோழன்மொழி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகர். இவரது மனைவி வில்வகனி.இந்த தம்பதியினருக்கு கணேசன் விஜயகுமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கணேசன் சுமைதூக்கும் தொழிலாளியாகவும் இவரது தம்பி விஜயகுமார் சமயபுரம் பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் தவசி (45). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.இந்நிலையில் நேற்று இரவு புதிதாக வாங்கிய பைக்கை கணேசனும் மற்றொருவரும் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.இதனை தவசி தட்டிக் கேட்டதாகவும் அப்போது கணேசன் தவசியை தாக்கி விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.மேலும் இரு குடும்பத்திற்கும் சிறு,சிறு பிரச்சினைகளால் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த தவசி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவசியை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கணேசனை தேடி வீட்டிற்கு சென்றனர் . அங்கு கணேசன் இல்லாத நிலையில் அவரது அம்மா வில்வகனி மற்றும் கணேசன் தம்பி விஜயகுமார் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். கணேசன் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் கணேசனின் தம்பி விஜயகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.அதை தடுக்க வந்த அவரது தாய் வில்வகணியையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் வீட்டில் கிடந்த வில்வகனி மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் விஜயகுமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரிவாளால் வெட்டி தப்பியோடிய சோழன் மொழி நகர் பகுதியை சேர்ந்த தவசி (49) , கார்த்திக் (19), கரன்குமார் (23), மணிகண்டன் (19), கணேசன் (19) ஆகிய 5 பேரை சமயபுரம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.