மாயமான முதியவர் சடலமாக மீட்பு

0 269
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கத்தில் கடந்த மார்ச் மாதம் மாயமான முதியவர் நேற்று குணசீலத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருந்த முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கம் அர்ஜுனர் தெருவை சேர்ந்தவர் 90 வயதான முனியாண்டி.இவர் வாத்தலை கடைவீதியில் வாழைப்பழம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடைக்குச் செல்லாமல் ஒரு மாதமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி வீட்டில் இருந்து வாத்தலை கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவருடைய உறவினர்கள் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் முதியோர் கிடைக்கவில்லை். இது குறித்து வாத்தலை காவல் நிலையத்தில் அவருடைய மகன் மாவடியான் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முதியவரை தேடி வந்தனர்.

இலையில் நேற்று குணசீலத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் முழுவதும் அழுகிய நிலையில் எலும்புக் கூடு ஒன்று கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வாத்தலை போலீசார் முதியவரின் மகனை சம்பவ இடத்திற்க்கு அழைத்துச் சென்று பார்த்தபோது இறந்து போன முதியவரின் உடலில் இருந்த ஆடைகளை வைத்து காணாமல் போனது தனது அப்பா என வாத்தலை போலீசாரிடம் அடையாளம் காட்டினார். பின்னர் உடலை கைப்பற்றிய வாத்தலை போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக முசிறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.