“நலன் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி, ஆக.9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் 27 மருத்துவ துறை சார்ந்த பிரிவுகள் கலந்து கொண்டு பொதுமக்களின் உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு உண்டான நோய்களுக்கு சம்பந்தமான மருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான விளக்கங்கள் மருத்துவர்கள் வழங்கினர்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் இருதய நோய் காச நோய் கண் சிகிச்சை புற்றுநோய் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என ஏராளமான துறைகளை சார்ந்த மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நோய்கள் தீர்ப்பதற்கான தீர்வை விரிவாக எடுத்துரைத்தனர்
மேலும் இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் காச நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் 10 பேருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் ஐந்து பேருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் சுமார் ஐந்து பேருக்கு தூய்மை நல வாரிய அட்டையையும் வழங்கினார் மேலும் இதனை அடுத்து முகாமை ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சூரியூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது, ரித்திக் என்ற இளைஞன் கால் ஊனம் ஏற்பட்டு பல ஆண்டு காலமாக சிரமப்பட்டு வந்த நிலையில் நடைபெற்ற முகாமில் உடனடியாக மருத்துவர்கள் அழைத்து இதற்கு உண்டான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் இதே போல் கட்டுரை சேர்ந்த மூன்று வயது தர்ஷிகா என்ற குழந்தைக்கு கன்னத்தில் பிறவியிலேயே கட்டியிருந்ததைக் கண்ட அவரது பெற்றோர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர் இதனை அடுத்து மருத்துவரை அழைத்து இதற்கு உண்டான பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் எடுத்துரைத்தார்
மேலும் இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல்.மண்டலம் மூன்றின் தலைவர்
மு மதிவாணன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமச்சந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயசந்திரன்,
உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், தியாஹிதீன், செந்தில், கார்த்திக், ரெக்ஸ், மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மாநகராட்சி மாவட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர் மற்றும் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டு இம்மருத்துவ முகாமில் பயன் பெற்றனர்