துறையூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 1  துறையூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே டி முருகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்கப்பட்டி மலை அடிவாரப் பகுதியில் தனியார் வெடி மருந்து (வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்) தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில் தேசிய தொழில்நுட்ப முகமை பிரிவு அதிகாரிகள் ( NIA) இரண்டு கார்களில் திருச்சி அதிவிரைவு பாதுகாப்பு படை போலீசாருடன் வந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த தொழிற்சாலையில் கடந்த‌ 2016 டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தால் அப்பொழுது தொழிற்சாலை மத்திய வெடி மருந்து புலனாய்வு பிரிவினரால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது, மீண்டும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது.  காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை 6 மணி வரை நடைபெற்றது .

Leave A Reply

Your email address will not be published.