தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது : லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. புகழாரம்!

0 15
Stalin trichy visit

திருச்சி  ஜுன் 1 தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது.   லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ்  பேட்டி அளித்தார்.

நீதி கட்சியின் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களில் 138வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் திருஉருவ சிலைக்கு அதிமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ்  செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சர்.ஏ.டி பன்னீர்செல்வன் 138வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முதல்வர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது. நல்லாட்சி தான் நடக்கும்.

பழ கருப்பையா தேவை இல்லாமல் பேசுகிறார். இந்திய நாட்டு பொருளாதாரத்திற்காக என்ன செய்துள்ளார். எவ்வளவு வருமான வரி கட்டியுள்ளார். CSR மற்றும் சொந்த நிதியில் இருந்து அவர் மக்களுக்கு என்ன செய்தார் என பட்டியலிட்டு காட்ட சொல்லுங்கள். எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பேச வேண்டும். இறைவன் வாயைப் படைத்தான் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. அதற்கு நாங்கள் சட்டப்படி நோட்டிஸ் அனுப்பி உள்ளோம் சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். வரும் 4ம் தேதி லால்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்க செல்கிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.