ஆர்.சி.மான்ய துவக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
திருச்சி, செப்.26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆர்.வளவனூர் ஆர்.சி.மான்ய துவக்கப்பள்ளியில்
நாட்டு நலத்திட்ட பணிகள் இன்றுதொடங்கியது.
கல்வி இணைச் செயல்பாடுகளுள் ஒன்றான நாட்டுநலப்பணித்திட்டம் புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் 2025,-2026 மாணவர்களைக் கொண்டு திட்ட சிறப்பு முகாமானது 26.09.2025 முதல் 02.10.2025 வரை ஆர்.வளவனூர் ஆர்.சி.மான்ய துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது.இதில்கோவில் உழவாரப்பணி, பள்ளி வளாகம் சீரமைத்தல்,சுற்றுப்புற சுகாதாரம் – விழிப்புணர்வு,அரசு மருத்துவமனை பார்வையிடல், அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லம் பார்வையிடல், போதைப் பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, மரக்கன்று மற்றும் விதை நடுதல் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு,புத்தகக் கண்காட்சியை பார்வையிடுதல் கிராம சாலை செப்பனிடுதல், மஞ்சள் பை விழிப்புணர்வு,
சுகாதார குடிநீர் விழிப்புணர்வு,எய்ட்ஸ் விழிப்புணர்வு, சிறுசேமிப்பின் அவசியம் விழிப்புணர்வு,
மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.