மணிமேகலை சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் நவராத்திரி விழா
திருச்சி, அக். 3 திருச்சி மாவட்டம், துறையூர் கிழக்குவாடி மணிமேகலை சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் நவராத்திரி விழா ஆரம்பம். மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு.
துறையூருக்கு அருகே உள்ள கிழக்குவாடியில் மணிமேகலை சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் SMK மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமலை சீனிவாசா கல்வியல் கல்லூரி மற்றும் திருமலை சீனிவாசா நர்சிங் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தமிழ் வருடமும் புரட்டாசி மாதம் வரக்கூடிய நவராத்திரி விழா பூஜை இன்று கல்லூரி வளாகத்தில் கொலு பொம்மைகள் வரிசைக்கிரகமாக அடுக்கி வைக்கப்பட்டு
நவராத்திரி விழாவானது ஆரம்பிக்கப்பட்டது.
இந்த குழுவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் அம்பாளுக்காக தனியாக இரண்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக அனைத்து கொலு பொம்மைகளுக்கும் முதல் நாள் நவராத்திரி விழாவில் கல்லூரித் தலைவர் சீனிவாசன் தீப ஆராதனைகள் காண்பித்து துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் மணிமேகலை இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன் பி.எட் கல்லூரி முதல்வர் நடராஜன்
நர்சிங் கல்லூரி முதல்வர் மரகதம் துறைத்தலைவர்கள் செல்வகுமார் இளையராஜா
இளவரசன் செந்தில் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் அளித்தனர். மேலும் பக்திப் பாடல்களை பாடியும் நடனமாடியும் விழாவினை கொண்டாடி சிறப்பித்தனர்.