பாதாள சாக்கடை இணைப்பு பெற சிறப்பு முகாம்

0 498
Stalin trichy visit

திருச்சி, அக். 4  திருச்சி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் 3 க்குட்பட்ட வார்டு எண்கள். 39, 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம்  நாளை  (05.10.2024)  காலை 10.00 மணியளவில் பாண்டியன் மஹால், காந்தி சாலை, தஞ்சை மெயின் ரோட்டில் நடைபெறவுள்ளது.

திருச்சி  மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதிகள் வழங்கும் பணிகள் Phase II ல் ரூ.377.29 கோடி மதிப்பீட்டில், பணிகள் துவங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது.
மேற்கண்ட முகாமில் புதிய பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது சொத்துவரி 2024-2025ன் இரண்டாம் அரையாண்டு வரை செலுத்தப்பட்ட ரசீது நகல் மற்றும் கட்டிடத்தின் பரப்பளவிற்கு ஏற்றார் போல் வைப்பு தொகை செலுத்தவும், பாதாள சாக்கடை இணைப்பிற்கான வைப்பு தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பின் அதன் ரசீது நகலினை இணைத்தும், செலுத்தப்படாதவர்கள் மேற்கண்ட முகாமில் வைப்பு தொகை செலுத்தி உரிய ஆவணங்களுடன் புதிய பாதாள சாக்கடை இணைப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி  மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.