மணப்பாறை அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
மணப்பாறை அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.,
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பில் 10.93 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அங்கன்வாடி மைய கட்டிடத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது திறந்து வைத்தார்.
விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, ஊராட்சிமன்ற தலைவர் அமுதவள்ளிசெல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் பார்வதிமுருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சீனிவாசபெருமாள், ஞானபிரகாசம், ஊராட்சி செயலாளர் பெரியசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.