திருச்சி விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக. 19 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேரடி அரசு பேருந்து சேவையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேரடியாக விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரையிலான புதிய நேரடி பேருந்து சேவையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட நிருவாக இயக்குநர் இரா.பொன்முடி, திருச்சி விமான நிலைய இயக்குநர் கோ.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.