திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்டம் சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் சாலை அருகில் செல்லும் 500mm விட்டமுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் தேவதானம் விறகு பேட்டை, உக்கடை, சங்கிலியாண்டபுரம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், சஞ்சீவி நகர், மகாலட்சுமி நகர், செந்தண்ணீர்புரம், கல்லுகுடி ஆகிய பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.
பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைப்பு அளிக்குமாறு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.