திருச்சி ஐஐஎம்-ல் பொது மேலாண்மை திட்டத்தில் (இ-ஜிஎம்பி) முதுகலை சான்றிதழ் பட்டப்படிப்பு அறிமுக விழா!

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பொது மேலாண்மை திட்டத்தின் கீழ் (இ-ஜி.எம்.பி) என்னும் முதுநிலை சான்றிதழ் பட்டப்படிப்புக்கான முதலாவது தொகுதிக்கான அறிமுக விழாவை நடத்தினர்.
இந்த பட்டயப் படிப்பில் சந்தைப்படுத்துதல், நிதி மற்றும் செயல்பாடுகள் மனிதவள மேம்பாடு குறித்த பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகும்.

click the image to chat on whatsapp
இ-ஜிஎம்பி திட்ட இயக்குனர் பேராசிரியர் சிவக்குமார் இதுகுறித்துக் பேசுகையில்… ஐஐஎம்-ல் பணி அனுபவத்தையும், கல்வியின் பன்முகத் தன்மையையும் தனித்துவத்தையும் எடுத்துக் கூறினார். வேலை செய்யும் தொழில் வல்லுனர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் வணிக மேலாண்மை பற்றிய நூல்களைப் பெறவும் பயனுள்ள வணிக முடிவுகளை எடுக்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த சான்றிதழ் பட்டப்படிப்பில் ஒரு வருடத்தில் 144 மணி நேர உள்ளடக்கத்துடன் நேரடி ஸ்டுடியோ முறையில் மற்றும் 5 நாட்கள் வளாகத்தில் இருப்பதற்கான கலப்பு கற்பித்தல் முறை உள்ளதாகவும் படிப்பை வெற்றிகரமாக முடித்த 109 மாணவர்களின் படிப்பு தொகுதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து நிர்வாக கல்வி மற்றும் ஆலோசனையின் தலைவர் பிரசாத் குப்தா பேசுகையில்…”கொரோனா காலகட்டத்தின் ஆரம்பத்தில் இந்த பட்டப்படிப்பு எவ்வாறு துவங்கப்பட்டது என்பதையும், அத்தனை சவால்களையும் வென்று இந்த பட்டப்படிப்பு வெற்றிகரமாக அமையும் என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் பீமாராயா மெட்ரி மற்றும் முந்தைய தலைவர் பேராசிரியர் மகேஸ்வரப்பா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் முதல் மூன்று இடங்களை பெற்ற சர்மிளா, முகமது முஷஃபா ஆலம், பிரவீன் குமார் மேயூர் ராம் ஆகியோருக்கு தகுதி விருது அறிவிக்கப்பட்டது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo