வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்

0 267
Stalin trichy visit

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு மேயர் மு.அன்பழகன்  தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று(03.11.22) நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருவெறும்பூர் பகுதி மண்டலம் மூன்று வார்டு குழு அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு மேயர் மு.அன்பழகன்  தலைமையில் மண்டல தலைவர் மு.மதிவாணன் முன்னிலையில், துணை ஆணையர் மற்றும் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்நடைபெற்றது.

மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் , தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , உத்த ரவின் பேரில் தேங்கும் தண்ணீ ரை அகற்ற மண்டலத்துக்கு இரண்டு 10 எச்பி மோட்டார்களும் வாங்கப் பட்டுள்ளது. மழைக்காலத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , துளசிங்க நகர் ஆகிய 7 இடங்களில் தண்ணீ ரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளது. இங்கு மின்மோட்டாரும் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் மழைநீர் எங்கும் தேங்கவில்லை பருவமழைக்காலத்தில் மாநகரில் மழைநீர் எங்கும் தேங்காத அளவுக்கு மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருவெறும்பூர் பகுதி மண்டலம் மூன்று வார்டு குழு அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றதற்கான மோட்டார்கள் மற்றும் தேவையான பொருட்களை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் பார்வையிட்டார்கள்.

இந்த ஆய்வில் மண்டலத்தலைவர் திரு.மு.மதிவாணன், துணை ஆணையர் திரு.எம்.தயாநிதி மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.