உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 4 இலட்சத்து 10 ஆயிரம் பறிமுதல்

0 395
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18 உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 4 லட்சத்து 10ஆயிரம் – திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி ஓயாமரி  சஞ்சீவி நகர் அருகே பறக்கும் படை தலைமை அலுவலர் முத்துக்கருப்பன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த குழஞ்சியப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.