ஆட்சி மொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணி
திருச்சி, டிச. 22 தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று திருச்சி காந்தி மார்க்கெட் (காவல் நிலையம்) அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் இளங்கோ, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.