மூதாட்டி தீக்குளித்து தற்கொலை : போலீசார் விசாரணை
திருச்சி, பிப்.1 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கபட்டியில் மூதாட்டி நேற்றிரவு உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கபட்டி வடக்கித் தெருவை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(75). இவரது கணவர் பழனியாண்டி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு சரவணன் என்ற மகன் கூத்தாயி, புஷ்பவள்ளி என இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.கணவரை இழந்த மூதாட்டி வெள்ளையம்மாள் மகன் மகள்களோடு எந்த ஒட்டும், உறவும் இல்லாமல் தனியே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளையம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் வெள்ளையம்மாள் தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் அவரது உறவினர்கள் பார்த்தபோது உடல் கருகி நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்
இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராமன், ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.